சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே ஏற்பட்ட மோதலில் நக்ஸல் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாார்.


சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப்படையினரிடையே ஏற்பட்ட மோதலில் நக்ஸல் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுக்மா பகுதியில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர், மாவட்ட ரிசர்வ் படையினர், கமாண்டோ பட்டாலியன் படைப்பிரிவினர் இணைந்து நக்ஸல்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நக்ஸல்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவ்விடத்தில் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்புப்படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட நக்ஸல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...