புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தில்லிக்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெய்ப்பூரில் தரையிறங்குகிறாரா?

வானிலை மோசமாக இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புது தில்லிக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 9:10 am

IANS


ஜெய்ப்பூர்: வானிலை மோசமாக இருந்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புது தில்லிக்கு பதிலாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புது தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அழைத்துக் கொண்டு வரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம், வானிலை மோசமாக இருந்தால் புது தில்லிக்கு பதிலாக ஜெய்ப்பூரில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மாற்று ஏற்பாட்டை முன்னிட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூன்று பேர் திங்கட்கிழமை விமான நிலையத்தை ஆய்வு செய்த நிலையில், மற்றொரு குழு நேற்றும் ஆய்வு செய்துள்ளது.

ஒரு வேளை, அதிபர் வரும் போது, புது தில்லியில் வானிலை மோசமாக இருந்தால், விமானத்தை ஜெய்ப்பூரில் தரையிறக்க தூதரகக் குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.