மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே மாா்ச் 7-ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
இதுதொடர்பாக சஞ்சய் ரௌத் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று வரும் மாா்ச் 7-ம் தேதியுடன் 100 நாள்கள் முடிவடையவுள்ளது. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம் லல்லாவை தரிசிப்பதற்காக மாா்ச் 7-ம் தேதி அயோத்தி செல்கிறார்.

அதேநாளில், சரயு நதிக்கரையில் ஆரத்தி பூஜை செய்யவுள்ளாா். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிவசேனை தொண்டா்கள், அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்றாா்.
கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று, அதன்பின் அயோத்திக்கு அவா் செல்லவிருக்கும் முதல் பயணம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!

ஷாலிமாா் பாகில் சாலையோர சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும்: முதல்வா் குப்தா

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


