சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

காஷ்மீரில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

காஷ்மீரில் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :24 பிப்ரவரி 2020, 8:26 am

PTI

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. 

காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர்ந்து 7 மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இன்று(பிப்.,24) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு சீருடைகளை அணிந்தபடி மகிழ்ச்சியாகப் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். 

கடந்தாண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. 

இந்நிலையில், பள்ளிகளைத் திறக்க மாநில நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காகக் குழந்தைகளை அனுப்பப் பெற்றோர் முன்வராததால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. தற்போது நிலைமை சீராகி வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. மூன்று மாதம் குளிர்கால விடுமுறை உட்பட மொத்தம் எழு மாதங்கள் விடுப்பு அளிக்கப்பட்டு பள்ளிகள், இன்று முதல் மீண்டும் செயல்படு தொடங்கியுள்ளன.  

இதுகுறித்து காஷ்மீர் பள்ளிக் கல்வி இயக்குநர் முகமது யூனிஸ் மாலிக் கூறுகையில், 

மாணவர்களின் திறனை வளர்ப்பதில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். பாடத்திட்டங்களைச் சரியான நேரத்தில் முடிப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவது நிர்வாகத்தின் பொறுப்பு என்று அவர் கூறியுள்ளார். மேலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைச் சரியான நேரத்தில் முடிப்பதைக் கண்காணிக்கக் களப் பணியாளர்கள் தவறாமல் பள்ளிகளுக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.