புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி வன்முறை: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

தில்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், கடந்த நான்கு நாள்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 28 ஆக உயர்ந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 பிப்ரவரி 2020, 3:15 am

DIN


வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், கடந்த நான்கு நாள்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 28 ஆக உயர்ந்துள்ளது.

சிஏஏவுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது. சுமார் 500 பெண்கள் பங்கேற்ற இப்போராட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் ஜாஃப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூா் பகுதியில் சிஏஏ ஆதரவுப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அப்போது, இருதரப்பினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இது ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளுக்கு பரவியது. கிழக்கு தில்லியில் திங்கள்கிழமை இரவுக்குப் பிறகு சந்த் பாக், பஜன்புரா, கோகுல்புரி, மெளஜ்பூர், கர்டாம்புரி, ஜாஃப்ராபாத் உள்ளிட்ட இடங்களில் தெருக்களில் இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த நான்கு நாள்களாக நீடித்து வந்த இந்த வன்முறை புதன்கிழமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வன்முறைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், வன்முறை காரணமாக காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் ஜிடிபி மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) காலை உயிரிழந்தார். இதன்மூலம் வன்முறை காரணமாக தில்லியில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.