கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கோடைக்காலம் எப்படி இருக்கப் போகிறது? எச்சரிக்கிறது இந்திய வானிலை மையம்

இந்தியாவில் வரும் கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 10:16 am

PTI

புது தில்லி: இந்தியாவில் வரும் கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மார்ச் மாதம் முதல் மே வரை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் வடமேற்கு, மேற்கு, மத்திய பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கமான அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தவிர பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலை அல்லது சராசரியான வெப்பநிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகியவை வடமேற்கு மாநிலங்களாகும். 

மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகியவை மத்திய இந்தியாவைச் சேர்ந்தவை. குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவை மேற்கு இந்தியப் பகுதிகளில் அடங்கும்.

தில்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகள், சட்டீஸ்கர், ஒடிஸா, மேற்கு வங்கம், சௌராஷ்டிரம், குஜராத்தின் கட்ச் பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரம்,  விதர்பா, கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் பகுதிகள், கேரளம் ஆகியவற்றில் வழக்கமான வெப்பநிலையை விட பகல் நேரத்தில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்து காணப்படும்.

இந்த பகுதிகளைத் தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலையே நீடிக்கும். அதில் -0.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் வெப்பநிலை மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.