மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு (விடியோ)

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றுள்ளார்.

News image
Updated On :7 ஜனவரி 2020, 4:02 pm

DIN


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றுள்ளார்.

ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Story image

இதுதவிர பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதில் பங்கேற்றார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷையும் அவர் சந்தித்தார்.

Story image

இதில் சுமார் ஒருமணி நேரம் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்ற தீபிகா படுகோன், அங்கு எதுவும் உரை நிகழ்த்தவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.