வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

எல்லையில் இருந்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: இந்திய ராணுவத் தளபதி

எல்லையில் இருந்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.

News image

naravane2084751

Updated On :11 ஜனவரி 2020, 7:47 am

PTI

எல்லையில் இருந்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறியிருப்பதாவது, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை ராணுவத்தில் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன், வடஇந்திய எல்லைப் பகுதிகளில் படைகளை பரவலாக்கி படைப்பலத்தை மேம்படுத்தி வருகிறோம்.

வடஇந்திய எல்லைப் பகுதியில் இருந்து வரும் எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது. 

இந்திய அரசியலமைப்புக்கு ராணுவம் எப்போதும் விஸ்வாசமாகவே இருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே இந்திய ராணுவம் எப்போதும் செயல்படும். 

இந்திய ராணுவம் என்பது ஒரு தொழிலமைப்புடன் கட்டமைக்கப்பட்ட படை. அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதேப் பண்புடன், தார்மீக நன்னடத்தையுடன் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாகவே இருக்கும்.

நமது படையை, ராணுவத்துக்குள்ளும், அதில் அடங்கிய பிற சேவைகளுடனும் ஒன்றிணைத்து உருவாக்குவதே நமது இலட்சியமாக உள்ளது. அதனை ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை நோக்கிக் கொண்டுச் செல்வோம் என்று ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.