சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். எனினும், அனைத்து மக்களும் வெளியேறி விட்டனரா என்று காவல் துறையினா் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனையிட்டனா். அந்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். தடையை மீறி ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படும். மேலும், இடிக்கப்படும் குடியிருப்புகள் உள்ள பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.