வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பட்ஜெட் மதிப்பீட்டில் தன் பங்கை முழுவதுமாக அளித்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஐ.நா.

ஐக்கிய நாடுகள் சபையின் பட்ஜெட் மதிப்பீட்டு நிதியில் தனக்கான பங்கினை முழுவதுமாக செலுத்திய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2020, 10:35 am

PTI

ஐ.நா.: ஐக்கிய நாடுகள் சபையின் பட்ஜெட் மதிப்பீட்டு நிதியில் தனக்கான பங்கினை முழுவதுமாக செலுத்திய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், தனது பங்கினை முழுவதுமாக செலுத்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகையில் இந்தியாவுக்கான பங்கு ஜனவரி 10ம் தேதி முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் பட்ஜெட் மதிப்பீட்டுத் தொகையை 4வது நாடாக இந்தியா இன்று வழங்கியுள்ளது. இந்தியாவுக்கும், ஏற்கனவே நிதியை வழங்கியிருக்கும் அர்மேனியா, போர்ச்சுகல், உக்ரைன் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.