காஷ்மீரில் இரு பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேரிட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேரிட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான மசில் செக்டார் அருகே இருக்கும் ராணுவ நிலையில் பனிச்சரிவு நேரிட்டதில் பணியில் இருந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வீரரைத் தேடும் பணி நடந்துவருவதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த பனிச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மோசமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல்போன மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கந்தெர்பால் மாவட்டத்தில் நேரிட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் இறந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...