பொதுவாக ரிசர்வ் வங்கியானது ஜூலை முதன் ஜூன் வரையிலான நிதியாண்டைக் கையாண்டு வருகிறது. எனவே மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு , வழக்கமாக நடைபெறும் தொலைநோக்கு பார்வை அடிப்படையிலான கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸை சந்திக்கும் போது இதுதொடர்பாக விவாதிக்கப்படும். ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் இந்த நிதியானது நடப்பாண்டு நிதிப்பற்றாக்குறையான் 3.3 சதவீதத்தை சமாளிக்க மத்திய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.