தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உ.பி: பள்ளியில் அலமாரி தவறி விழுந்ததில் 7 வயது சிறுமி பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மர அலமாரி தவறி விழுந்ததில் சிறுமி பரிதாபமாக

News image
Updated On :22 ஜனவரி 2020, 6:57 am

IANS

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மர அலமாரி தவறி விழுந்ததில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேசம், அம்பேத்கர்நகர் மாவட்டத்தில், சலாவுதின்பூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் படித்துவந்தார் சிறுமி பாயல் (7). 

நேற்று மதியம் பள்ளி முடிந்ததும், கண்ணாடி டம்ளரை அலமாரியில் வைக்கச்சொல்லி பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறுமியை அனுப்பியுள்ளார். சிறுமி அலமாரியின் கதவுகளைத் திறக்கும்போது, எதிர்பாராத வகையில் மர அலமாரி சிறுமியின் தலையில் விழுந்தது. 

மர அலமாரி விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி பாயல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் மேல் விழுந்த கண்ணாடி துண்டுகளை அகற்றி பள்ளி ஆசிரியர்கள் சிறுமியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

தகவலறிந்து, குழந்தையின் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் ஆசிரியரை பிணைக்கைதியாக அமரவைத்து, பள்ளியை முற்றுகையிட்டனர். காவல்துறையினர் அப்பள்ளிக்கு வந்து பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.