ஜனவரி 27 முதல் தூங்கா நகரமாகிறது மும்பை: ஆதித்யா தாக்கரே
'மும்பை 24 மணி நேரம்' என்ற கொள்கைக்கு மகாராஷ்டிர அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


மும்பை: 'மும்பை 24 மணி நேரம்' என்ற கொள்கைக்கு மகாராஷ்டிர அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிர அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்திருப்பதை அடுத்து, ஜனவரி 27ம் தேதி முதல் மும்பையில் 24 மணி நேரமும் மால்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், கடைகள் அனைத்தும் திறந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பேசுகையில், லண்டன் நகரைப் போல மும்பையிலும் இரவு நேரங்களில் கடைகள், மால்கள் திறந்திருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதால் மகாராஷ்டிர அமைச்சரவை இந்த கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 5 லட்சம் மக்கள் வேலை வாய்ப்புப் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இரவு நேரத்தில் அனைத்துக் கடைகளும், பொழுதுபோக்குக் கூடங்களும், மால்களும் திறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும் அவர் விளக்கினார்.
இரவில் கடைகளைத் திறந்துவைத்திருந்தால், வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் கடையை திறந்து வைக்கலாம். முதற்கட்டமாக, குடியிருப்புகள் அல்லாத பகுதிகளில் இருக்கும் கடைகள், உணவகங்கள், திரையரங்கு, மால்கள் இரவு நேரத்தில் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையின் பணிச் சுமை நிச்சயம் அதிகரிக்காது, தற்போதுதான், கடைகள் அனைத்தும் நள்ளிரவு 1.30 மணிக்குள் மூடப்படுகிறதா என்பதை அவர்கள் சோதித்து வந்தார்கள். இனி அந்த வேலை அவர்களுக்கு இருக்காது. எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் அவர்கள் ஈடுபடலாம்.
அதே சமயம், பப்கள் மற்றும் பார்கள் வழக்கம் போல நள்ளிரவு 1.30 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் இனி இரவு நேரத்திலும் சாப்பிடலாம், கடைக்குச் சென்று ஷாப்பிங் செய்யலாம், திரைப்படம் பார்க்கலாம். ஏன் என்றால் மும்பை இனி 24 மணி நேரமும் இயங்கும் நகரமாகியுள்ளது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...