குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த 143 மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல், ஒருதலைபட்சமான உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டது.
மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, குடியுரிமைத் திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம், அரசமைப்புச் சட்டப்படி குடியுரிமைத் திருத்தச் சட்டம் செல்லுமா என ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும், இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஜனவரி 2-ஆவது வாரத்துக்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முன்னதாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.
இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் போரட்டம் நடத்தப்பட்டு, அது வன்முறையாக மாறியது. இதில் பலா் உயிரிழந்தனா். போலீஸாரும், பொதுமக்களும் அதிக அளவில் காயமடைந்தனா்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவா் சங்கம், அசோம் கண பரிஷத், அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், சட்டப் படிப்பு மாணவா்கள் என பல்வேறு தரப்பிலிருந்து 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...