47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நெடுஞ்சாலைப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவில்  நெடுஞ்சாலைப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் நிதின் கட்கரி
Updated On :1 ஜூலை 2020, 11:28 am

DIN

இந்தியாவில்  நெடுஞ்சாலைப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

லடாக் எல்லையில் சீனத் தாக்குதலை அடுத்து மக்கள் பலர் சீனப் பொருள்களை புறக்கணித்து வருகின்றனர். இதன்பின்னர், இந்தியாவில் உள்ள 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. 

இதன்தொடர்ச்சியாக, இந்தியாவில் நெடுஞ்சாலைப் பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டுத் திட்டமாக இருந்தாலும் சீன நிறுவனங்களை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

மேலும், முன்னதாக நெடுஞ்சாலைப் பணிகளில் உள்ள சீன நிறுவனங்களுக்குத் தடை விதிப்பதோடு, இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பல நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் பங்கெடுக்க விதிமுறைகள் விரிவுபடுத்தப்படும் என்றார். 

புதிய விதிமுறைகளை வகுக்கும்பொருட்டு, ஒரு கூட்டத்தை நடத்துமாறு நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.சந்து ஆகியோரிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.