/

புகைபிடிப்பவர்களுக்கு கரோனா அபாயம் அதிகம்: உலக சுகாதார அமைப்பு

புகைபிடிப்பவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடல்நலன் அதிகமாக பாதிக்கப்படவும், மரணம் அடையவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

News image

புகைப்பிடிப்பவர்களுக்கு கரோனா அபாயம் அதிகம்

Updated On :2 ஜூலை 2020, 1:04 pm

PTI


லண்டன்: புகைபிடிப்பவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடல்நலன் அதிகமாக பாதிக்கப்படவும், மரணம் அடையவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

ஆனால், புகைபிடிப்பவர்களுக்கு கரோனா அபாயம் எந்த அளவுக்கு அதிகம் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஐ.நா. சுகாதார அமைப்பு, கரோனா வைரஸ் மற்றும் புகைபிடிப்பவர்கள் குறித்து வெளியான 34 ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து, இந்த வாரம் ஒரு அறிவியல்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.  அதில் புகைபிடிப்பவர்களுக்கு கரோனா தொற்றுப் பரவும் அபாயம் முதல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம், நிலைமை மோசமடைதல், கரோனாவால் மரணம் அடைதல் வரை விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 18% பேர் புகைபிடிப்பவர்களாக இருப்பதும், கரோனா நோயாளி புகைபழக்கம் கொண்டவராக இருப்பது அல்லது புகைபழக்கம் இல்லாதவர் என்பது, அவர்களது நிலைமை மோசமடைவது மற்றும் மரணத்துக்கான வாய்ப்பு அதிகரிப்பதோடு தொடர்புடையதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், புகைபிடிப்பவர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கும் போது அது தீவிரமடைவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்துவதற்கும் தேவையான ஆதாரங்கள் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.