பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம்!

ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளி இரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது

News image

ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளி இரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Updated On :3 ஜூலை 2020, 2:52 pm

புது தில்லி: ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளி இரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹரியாணா குருகிராம் மாவட்டத்தில் வெள்ளி இரவு 7 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையமானது  குருகிராமிலிருந்து தெற்கே 60 கிமீ தொலைவில் இருந்துள்ளது. அண்டை மாநிலமான தில்லியிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ராஜஸ்தான மாநிலம் ஆல்வாரிலும் இதேநேரத்திற்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இதன் மையமானது ஆல்வாரில் இருந்து 35 கிமீ தென்மேற்கே இருந்துள்ளது.

இரண்டிலும் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து உடனே தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.