புதுதில்லி: தனியார் துறை வங்கியான, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், அதன் நிகர லாபம் 5 சதவீதம் உயர்ந்து ரூ. 319 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு, இதே காலாண்டில், வங்கி ரூ. 304 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு, இதே காலாண்டில் ரூ. 11,308 கோடியாக இருந்த நிலையில், இந்தக் காலாண்டில் அது ரூ. 12,183 கோடியாக உயர்ந்துள்ளது.
அறிக்கை செய்யப்பட்ட இந்தக் காலாண்டில், வட்டியிலிருந்து கிடைத்த வருமானம் ரூ. 10,553 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ. 9,413 கோடியாக இருந்தது.
இக்காலாண்டின் போது, சண்டிகர் கிளையில் பிப்ரவரி 2026ல் ரூ. 590 கோடி மதிப்பிலான மோசடி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஹரியாணா அரசு ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியை தனது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் பட்டியலிலிருந்து நீக்கியதுடன், மாநிலத்தின் அனைத்து நிதிகளையும் வங்கியிலிருந்து திரும்பப் பெறுமாறும் உத்தரவிட்டது. அத்துடன், அரசுத் துறைகள் தங்கள் நிதியை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும், நிதி முறைகேடு, குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இதேபோல், வங்கியின் நிகர வாராக்கடன்கள், கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 0.53 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 0.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.
Summary
IDFC First Bank reported a marginal 5 per cent rise in net profit to Rs 319 crore for the fourth quarter ended in March 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை



