தங்கத்தில் முகக்கவசம்: புணே பணக்காரரின் புதிய யோசனை
கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவம் கட்டாயம் என்று சுகாதாரத் துறை அறிவித்த பிறகு, கைக்குட்டை, துப்பட்டா, துண்டு என அனைத்தும் முக்கவசங்களாக அவதாரம் எடுத்தன.


கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவம் கட்டாயம் என்று சுகாதாரத் துறை அறிவித்த பிறகு, கைக்குட்டை, துப்பட்டா, துண்டு என அனைத்தும் முக்கவசங்களாக அவதாரம் எடுத்தன.
இதையும் படிக்கலாம்.. மதுரையில் மேலும் 7 நாள்களுக்கு முழுப் பொதுமுடக்கம் நீட்டிப்பு
இந்த நிலையில், புணேவின் பிம்ப்ரி - சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த பணக்காரரான ஷங்கர் தனது முகத்துக்கு ஏற்றவகையில் ஒரு தங்க முக்கவசம் தயாரித்து அதனை அணிந்துள்ளார்.

இது மிக மெல்லிதாகவும், சிறு சிறு கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகள் கொண்டதாகவும் இருப்பதால், இதை அணிந்து கொள்ளம் போது மூச்சு விடுவதில் எந்த சிரமமும் தெரியவில்லை. ஆனால், இது கரோன தொற்றில் இருந்து எந்த அளவுக்கு எனக்கு பாதுகாப்புத் தரும் என்று உறுதியாகத் தெரியவில்லை என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தனது உடல் முழுக்க தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு, சிறிய நகைக்கடை போல வலம் வரும் ஷங்கர், முகக்கவசத்தையும் தங்கத்திலேயே செய்து அணிந்து கொண்டுள்ளார்.
கடைசியாக இதன் மதிப்பு எவ்வளவு என்று சொல்லாமல் விட்டுவிட்டோமே? இந்த தங்க முகக்கவசத்தின் மதிப்பு ரூ.2.89 லட்சமாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...