யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 7 லட்சத்தைத் தாண்டியது 

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.  

News image

coronovirus

Updated On :7 ஜூலை 2020, 4:53 am

DIN

இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.  

இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தீவிரம் அடைந்து வருகிறது. நாள்தோறும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, கரோனா நோய்த்தொற்றால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலில் ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்குச் சென்றது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

இந்த நிலையில் இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது.  நாட்டில் செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,252 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 5ஆவது நாளாக நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,19,665-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 467 போ் உயிரிழந்தனா். அதனால், நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 20,160-ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 4,39,948-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 2,59,557 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.