எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கரோனா: நாடு முழுவதும் இதுவரை 6.1 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6.1 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2020, 12:30 pm

DIN

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6.1 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கொவைட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ‘ஒட்டு மொத்த அரசும்’ செயல்படுவது என்ற உத்தியை மத்திய அரசு பின்பற்றுகிறது. கூட்டு முயற்சிகள், தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்புகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, நம் நாட்டில் கொவைட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 3,31,146 மட்டுமே. இது இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தொற்றுப் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு (34.18%) ஐ விட சற்று அதிகமாக உள்ளது.
நாள்தோறும் வீடு வீடாக சென்று தொற்று குறித்து கணக்கெடுப்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொவைட்-19 பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இவை உதவின.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் 3-வது வாரத்திலிருந்து குணமடைவோர் விகிதம் 50 விழுக்காட்டை கடந்துள்ளது.
குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதோடு, தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொவைட்-19 நோயாளிகளில் 63.25 சதவீதத்தினர் இதுவரை குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.