துமகுரு: கரோனா வைரஸ் தொற்றைப் பார்த்து பலரும் அச்சப்படும் நிலையில், அதையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் திருடர்கள்.
உதாரணமாக கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் குப்பி தாலுகா, கே.ஜி. டெம்பிள் பகுதி கரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள வீடுகளில் வசித்தவர்கள் கரோனா பாதித்து அரசு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வீடுகளுக்குள் புகுந்து திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது.
தாயும், மகளும் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைக்காலம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டில் இருந்த 80 ஆயிரம் ரொக்கம், 10 சவரன் தங்க நகைகள் திருடுப் போயிருப்பது அதிர்ச்சியை அளித்தது.
இது ஒரு உதாரணம் மட்டுமே, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுள்ளது.
இதுபோல கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்களின் எண்ணிக்கையும், திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்து வருவதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களுக்குச் செல்லும் மக்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் சென்று திருடும் திருடர்களைப் பிடிப்பதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாகக் கூறும் கர்நாடக காவல்துறை, திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


