உங்களையே சந்தேகியுங்கள்; மற்றவர்களை அல்ல: புதிய கரோனா விழிப்புணர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், மற்றவர்களை வேண்டாம், உங்களையே சந்தேகியுங்கள் என்று புதிய விழிப்புணர்பு பிரசாரம் தொடங்கியுள்ளது.
உங்களையே சந்தேகியுங்கள்; மற்றவர்களை அல்ல: புதிய கரோனா விழிப்புணர்வு
உங்களையே சந்தேகியுங்கள்; மற்றவர்களை அல்ல: புதிய கரோனா விழிப்புணர்வு
Updated on
1 min read

குவகாத்தி: நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், மற்றவர்களை வேண்டாம், உங்களையே சந்தேகியுங்கள் என்று புதிய விழிப்புணர்பு பிரசாரம் தொடங்கியுள்ளது.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் புதிய விதமான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியதுள்ளது. அதில், மற்றவர்களிடம் இருந்து நமக்கு கரோனா வந்து விடுமோ என்று சந்தேகிப்பதற்கு பதிலாக, நமக்கு ஒரு வேளை கரேனா இருந்து அது மற்றவர்களுக்கு பரவி விடுமோ என்று சந்தேகியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் 53 ஆயிரம் குடும்பங்களில் 2.5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீடாகச் சென்று, தங்களுக்கு கரோனா இருக்குமோ என்று சந்தேகிக்குமாறு புதிய வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஒருவேளை நமக்கு கரோனா இருந்தால் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்று நினைத்து அப்படி நடந்து கொள்ள வேண்டும். கரோனா வந்துவிட்டது. வீட்டில் இருக்கிறோம். நமக்கு வந்த வைரஸ், நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பரவக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதே நிலையில்தான் பொதுமக்கள் அனைவரும் வெளியில் சென்றாலும் பின்பற்ற வேண்டும். அதாவது மற்றவர்களுக்கு கரோனா இருந்து அது நமக்கு தொற்றிவிடுமோ என்பது போல நடந்து கொள்வதை மாற்றி, நமக்கு கரோனா இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்ற வகையில் செயல்படும்போது நிச்சயம் அது நல்லப் பலனைக் கொடுக்கும் என்கிறார்கள் மாவட்ட அதிகாரிகள்.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துவிட்டது. தொடர்ந்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சில முக்கிய மாநிலங்களில் மட்டுமே கரோனா பரவத் தொடங்கியது. தற்போது சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கூட கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இதனைத் தடுக்க மாற்றி யோசிக்க வேண்டியது அவசியம் என்ற நிலையில், நாகாலாந்தில் புதிய விழிப்புணர்வு நிச்சயம் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com