அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா மற்றும் கிளை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அசாமில் வெள்ளத்தில் சிக்கி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 85 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒருபக்கம் கரோனா பரவல் காரணமாக மக்கள் பதற்றமடைந்துள்ளனர். மறுபுறம் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் மாற்றப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது' என்றார்.
மேலும், அசாமில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் காசிரங்கா தேசிய பூங்காவில் ஒன்பது காண்டாமிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


