இந்தியாவில் ஒரேநாளில் 37,148 பேருக்கு கரோனா பாதிப்பு; மொத்த பாதிப்பு 11,55,191ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு முன்எப்போதும் இல்லாத அளவாக தினமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது: செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் மேலும் 587 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்துவிட்டது. 4,02,529 போ் சிகிச்சையில் உள்ளனா். 7,24,578 போ் குணமடைந்துவிட்டனா். ஜூலை 20-ஆம் தேதி நிலவரப்படி 1,43,81,303 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 3,18,695 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் அந்த மாநிலத்தில்தான் மிக அதிக அளவாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...