நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமர் கோவில் பூமி பூஜை விழாவுக்கு உத்தவ் தாக்கரே கண்டிப்பாக செல்வார்: சஞ்சய் ராவத்

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டிப்பாக செல்வார் என கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

News image

சஞ்சய் ராவத்

Updated On :21 ஜூலை 2020, 11:53 am

DIN

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டிப்பாக செல்வார் என கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோவில் 'பூமி பூஜை' விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இவ்விழாவிற்கு பல முக்கிய அரசியல் தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. 

இதையடுத்து, ராமர் கோயில் பூமி பூஜைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டிப்பாக செல்வார், ஏனென்றால் சிவசேனை கட்சி உணர்வுப்பூர்வமாக இந்த விவகாரத்துடன் தொடர்புடையது என கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க சிவசேனையும் உழைத்துள்ளது என்று கூறிய அவர், கரோனா பரவல் இல்லையெனில் லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவிற்கு வருகை தருவார்கள் என்றும் தெரிவித்தார். 

எனினும், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.