தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான வழக்கு 2 வார காலத்திற்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான நிதியை உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

News image

Supreme court postponed Tamilnadu cricket council case against BCCI

Updated On :22 ஜூலை 2020, 10:37 am

DIN

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான நிதியை உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

புதிய விதிமுறைகளை கடைபிடிக்காதது மற்றும் விதிகளை ஏற்றுக்கொள்ளாமல் செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்திருந்தது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தியும்  மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்க வேண்டிய நிதியை  வழங்காததால்  உரிய நிதியை அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.