என்ஐஏ விசாரணைக்கு ஆஜரானார் பினராயி விஜயனின் முன்னாள் செயலர்
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர் இன்று (வியாழக்கிழமை) என்ஐஏ விசாரணைக்கு ஆஜரானார்.


கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர் இன்று (வியாழக்கிழமை) என்ஐஏ விசாரணைக்கு ஆஜரானார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜரானார். வெளியே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல் அவர் உள்ளே சென்றார். இதையடுத்து, இரவு 9 மணியளவில் விசாரணை முடிந்து, காவலர்கள் உதவியுடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். அப்போதும் செய்தியாளர்கள் எழுப்பிய எவ்விதக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "விசாரணை நடைபெற்று வருவதால், என்ஐஏ மற்றும் சுங்கத் துறை அவரை மீண்டும் அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றனர்.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இன்று மாலை செய்தியாளர்கள் எழுப்பியபோது, "என்ஐ அவர்களது பணியை செய்யட்டும். இதுபற்றி நான் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளேன்." என்றார் அவர்.
இந்த வழக்கில் கடந்த வாரம் விசாரணையைத் தொடங்கிய சுங்கத் துறை, சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...