விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு

ராம்நாத் கோவிந்த் தலைமையின் கீழ் இந்தியா கரோனா பேரிடர் காலத்தை எதிர்கொண்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2020, 9:38 am

PTI


புது தில்லி: கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் நாள் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகவும், அவரது தலைமையின் கீழ் இந்தியா கரோனா பேரிடர் காலத்தை எதிர்கொண்டு வருவதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டு காலத்தில், ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள் உள்பட 7 ஆயிரம் முன்கள வீரர்களைக் குடியரசுத் தலைவர் சந்தித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், சராசரியாக ஒரு நாளைக்கு முக்கியமான 20 பேரைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்தித்துள்ளார் என்று தெரிகிறது.

இதுவரை, நாட்டில் உள்ள 19 மாநிலங்களுக்கும், 4 யூனியன் பிரதேசங்களுக்கும் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும், பிரதமர் நிவாரண நிதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒரு மாத ஊதியத்தை நிதியாக அளித்தார். அதோடு, பேரிடர் நிவாரண நிதிக்கு ஒரு ஆண்டின் மொத்த ஊதியத்தில் 30% தொகையையும் அளித்து, நாட்டின் நலனில் அக்கறை செலுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.