6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாம் வெள்ளம்: 100-ஐத் தாண்டியது பலி எண்ணிக்கை

அசாம் வெள்ளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 5 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

News image
அசாம் வெள்ளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 5 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
Updated On :26 ஜூலை 2020, 3:52 pm

DIN


அசாம் வெள்ளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 5 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

அசாம் மாநிலம் கடந்த சில நாள்களாகவே வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா உள்பட முக்கிய நதிகள் இன்னும் அபாயகர கட்டத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கின்றன. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, மாநிலத்தின் 23 மாவட்டங்களில் 2,265 கிராமங்களில் 24.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில், 18 மாவட்டங்களில் சுமார் 46,000 பேர் 457 மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கசிரங்கா தேசியப் பூங்காவில் ஞாயிறு காலை வரை 129 விலங்குகள் நீரில் மூழ்கியும், வாகனத்தில் அடிபட்டும் பலியாகியுள்ளன. அருகேவுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனத்தில் அடிபடும் விபத்துகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.