மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அயோத்தி ராமர் கோயில் பூசாரி, 14 காவலர்களுக்கு கரோனா தொற்று

அயோத்தி ராமர் கோயில் பூசாரி மற்றும் பாதுகாப்புப்பணியில்  ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூலை 2020, 10:17 am

DIN

அயோத்தி ராமர் கோயில் பூசாரி மற்றும் பாதுகாப்புப்பணியில்  ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட 50 பேர் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் அதிகம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராமர் கோயிலில் பணியாற்றி வரும் பூசாரிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அடிக்கல் நாட்டு விழா பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பிரதமர் வரவுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.