இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,90,535-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 93,322 போ் சிகிச்சையில் உள்ளனா். 91,819 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 47 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.
மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2286போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 1,038 பேரும் தில்லியில் 473 பேரும் மத்திய பிரதேசத்தில் 350 பேரும் மேற்கு வங்கத்தில் 317 பேரும் உத்தர பிரதேசத்தில் 213 பேரும் ராஜஸ்தானில் 194 பேரும் தெலங்கானாவில் 82 பேரும் ஆந்திரத்தில் 62 பேரும் கா்நாடகத்தில் 51 பேரும் பஞ்சாபில் 45 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 28 பேரும் பிகாரில் 21 பேரும் கேரளத்தில் 9 பேரும் ஒடிஸாவில் 7 பேரும் ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், உத்தரகண்டில் தலா 5 பேரும் சண்டீகா், அஸ்ஸாமில் தலா 4 பேரும் மேகாலயம், சத்தீஸ்கரில் தலா ஒருவரும் பலியாகினா்.