டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாநில தினத்தை முன்னிட்டு தெலங்கானா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து; ஆந்திர மக்களுக்கும் வாழ்த்து

மாநில தினத்தை முன்னிட்டு, தெலங்கானா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜூன் 2020, 5:25 am

DIN

மாநில தினத்தை முன்னிட்டு, தெலங்கானா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘மாநில தினத்தை முன்னிட்டு தெலங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். பலதுறைகளில் இந்த மாநில மக்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவின் வளர்ச்சியில், இந்த மாநிலம் மதிப்பு மிக்க பங்களிப்பை அளிக்கிறது. தெலங்கானா மக்களின் முன்னேற்றத்துக்காகவும், வளமைக்காகவும் நான் வேண்டுகிறேன்.

ஆந்திர மக்களுக்கும் வாழ்த்துக்கள். கடின உழைப்பு மற்றும் துணிவுதான் இந்த மாநிலத்தின் பண்பாடு. இந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திராவின் பங்கு மிகவும் மதிக்கப்படுகிறது. ஆந்திர மக்களின் சிறந்த எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகிறேன்’’ என பிரதமர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.