புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓடி வந்து உணவளித்த பிகார் மக்கள்: மனதை உருக்கும் விடியோக்கள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓடி வந்து உணவளித்த பிகார் மக்கள்: மனதை உருக்கும் விடியோக்கள்

மிசோரம் நோக்கி எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த ரயில், தங்கள் ஊரைக் கடக்கும் போது, ஓடி வந்து உணவளித்திருக்கிறார்கள் பிகார் மக்கள்.

மிசோரம் நோக்கி எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த ரயில், தங்கள் ஊரைக் கடக்கும் போது, ஓடி வந்து உணவளித்திருக்கிறார்கள் பிகார் மக்கள்.

இந்த விடியோ வலைத்தளங்களில்  வேகமாகப் பரவிய நிலையில் மிசோரம் முதல்வரும் இதனை தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் மிசோரம் செல்லும் ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், அஸ்ஸாம் வழியாக தங்கள் ரயில் சென்ற போது, தங்களுக்கு அளித்த உணவை, வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு அளித்து உதவிய விடியோ வைரலான சில நாள்களில் இதேப்போன்ற ஒரு விடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இந்த விடியோவை மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவில், மிசோரம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓடோடி வந்து உணவளிக்கும் சில நல்லுள்ளங்களின் செயல் இடம்பெற்றுள்ளது.

அன்பெனும் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அழகாய் தெரிகிறது இந்தியா என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மிசோரம் செல்லும் ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்த விடியோ..
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com