
தில்லியில் உள்ள கான் சந்தையின் லோக் நாயக் பவனில் அமைந்துள்ள அமலாக்க இயக்குநகரத்தின் தலைமையகத்தில் ஐந்து ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் முழுவதும் நேற்று சைனிடைசர் திரவம் கொண்டு சுத்தப்பட்டுத்தப்பட்ட நிலையில், நாளை வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தில்லியில் இதுவரை 26,334 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,887 தொற்று பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று 2,36,657ஐ எட்டியுள்ளது. இத்தாலியை விஞ்சியுள்ளது இந்தியா. உலக அளவில் கரோனா பாதிப்பில் 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.