இதற்கிடையே, கரோனா உறுதி செய்யப்பட்ட ஆனால் லேசான அறிகுறி அல்லது அறிகுறி இல்லாத நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், கரோனா பாதித்து அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறியோடு இருப்பவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம் இல்லை. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தலாம். அதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர்களை அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைப்பது அல்லது கரோனா பாதுகாப்பு மையம் அல்லது கரோனா மருத்துவமனை வளாகத்தில் உள்ள மையங்களில் தங்க வைக்கலாம்.