மகாராஷ்டிரம், தில்லியில் ஐந்து பேரில் ஒருவருக்கு கரோனா
கடந்த ஒரு வாரத்தில் தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் ஐந்து பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புது தில்லி: கடந்த ஒரு வாரத்தில் தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் ஐந்து பேரில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோய் மையம் நடத்திய ஆய்வில், ஒரு வாரத்துக்கு முன்பு, மகாராஷ்டிரத்தில் கரோனா உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, 100 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டால் அவர்களில் 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்படும். இதே நிலைதான் கடந்த மார்ச் மாத மத்தியில் நியூ யார்க்கிலும் நேரிட்டதாக புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கின்றன.
இவ்விரு மாநிலங்களிலும் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடுமையான அறிகுறியோடு மருத்துவமனையில் அனுமதி கேட்டு வரும் போது, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் கடந்த சில நாட்களாக இவ்விரு இடங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
உடனடியாக இவ்விரு மாநிலங்களிலும் கரோனா பரிசோதனை அதிகப்படுத்தி, கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தாவிட்டால், நிலைமை சமாளிக்க முடியாத அளவுக்கு மோசமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
திடீரென கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, போதுமான அளவுக்கு பரிசோதனைகள் செய்யப்படாததையும், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையுமே காட்டுகிறது.
சில நாள்களுக்கு முன்புவரைக் கூட நிலைமை இந்த அளவுக்கு மோசமடையவில்லை. மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை எட்டியிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை 14 ஆகவும், தில்லியில் 26 ஆயிரத்தை எட்டியிருக்கும் நிலையில், கரோனா பாதிப்பு 10க்கு மேல் என்ற அளவில் உள்ளது.
இந்த வகையில், கடந்த ஏழு நாள்களில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுவோரின் எண்ணிக்கையில், கரோனா உறுதி செய்யப்படும் சராசரி எண்ணிக்கை 6க்கு மேல் என்ற அளவில் உள்ளது. இது குஜராத், தமிழ்நாடு, பிகார், ஹரியாணா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்னும் கூடுதலாக இருக்கும்.
கரோனா தொற்று பாதிப்பை கூர்ந்து கவனித்து வருவோர், தற்போதுதான் இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகி வருகிறது என்பதை நிச்சயம் உணர்வார்கள்.
பரிசோதனை செய்யும் 100 பேரில் 20 பேருக்கு கரோனா இருப்பது என்பது, சமூகத் தொற்றாக மாறியதையே உணர்த்துகிறது. அதிலும் குறிப்பாக தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது என்று தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் அனுபம் சிங் கூறியுள்ளார்.
மார்ச் மாதத்தின் மத்தியப் பகுதியில் நியூ யார்க்கில் இதே நிலைமைதான் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல், பேரழிவாக மாறியதை கவனத்தில் கொண்டு அரசுகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...