தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2020, 9:33 am

DIN


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழு நாள்களுக்கு முன்பு, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அனைவரது கரோனா பரிசோதனை முடிவுகளும் நேற்று இரவு கிடைத்துள்ளது. அதில், 26 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஜெய்ப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் புதிதாக 144 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுளள்து. 5 பேர் பலியாகியள்ளனர். அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 11,020 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா பாதித்து 251 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.