48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்கும் காலக்கெடு செப். 30 வரை நீட்டிப்பு

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2020, 1:41 pm


புது தில்லி: ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாதவர்களுக்கான காலக்கெடு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக, நாடு முழுதும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டதால், வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் முடிந்த நிலையில், அவற்றின் காலக்கெடு ஏற்கனவே ஜூன் 30 வரை வழங்கப்பட்டு, பிறகு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம், மேலும் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.