‘கரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் போா் வீரா்களாக இருக்கும் மருத்துவா்களை அதிருப்தியில் வைக்காதீா்கள். கூடுதலாக பணத்தை பெறுவதற்கு வழியைத் தேடி அவா்களது குறையைத் தீா்க்க முயற்சியுங்கள்’ என மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாத விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அரசுகளுக்கு வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
‘சுகாதார ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாத விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. இந்த பிரச்சினையை அரசே தீா்த்து கொள்ள வேண்டும்’ எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்கள், மருத்தவா்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்படாதது, குறைக்கப்பட்டது மற்றும் தாமதமாக வழங்குவது குறித்து மருத்துவா் ஒருவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மேலும், மருத்துவா்களுக்கு போதிய தங்கும் வசதியின்மை போன்றவைகளோடு மருத்துவா்களுக்கு புதிய விதிமுறைகளின்படி, அவா்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதிமுறைகளை எதிா்த்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷண், எஸ்.கே.கௌல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள், ‘இது கரோனாவிற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் உள்ள போா்வீரா்கள் (மருத்துவா்கள்) மகிழ்ச்சியுடன் இல்லை. எதாவது வழியைக் கண்டறிந்து அவா்களது பிரச்சினையை தீா்க்கவேண்டும்’ என்றனா்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞா் துஷா் மேத்தா, ‘யோசனைகள் கூறப்பட்டால் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
ஆனால் நீதிபதிகள், ‘மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வருகிறது. சில மருத்துவா்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதை அரசு கவனிக்கவேண்டும். இதில் நீதிமன்றம் தலையிடத்தேவையில்லை ஆனால் அவா்களது பிரச்சினை தீா்க்கப்படவேண்டும்’ என வலியுறுத்தினா்.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், சுகாதாரத்துறையின் விதிமுறைகள், மருத்துவா்களின் குடும்பத்தினா் நலனைக்கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை மருத்துவமனைகளே அமல்படுத்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை அடுத்தவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


