கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தெற்கு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் ஜடூரா நிபோரா பகுதியில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Published On :

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் ஜடூரா நிபோரா பகுதியில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

புலனாய்வுத் துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினரும், இராணுவமும் இந்தப் பகுதியை சுற்றிவளைத்தனர். மறைந்திருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் ரெபன் பிஞ்சுரா மற்றும் சுகூ கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த மூன்று மோதல்களில் குறைந்தது 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.