டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை: கட்டணத்தை குறைத்தது மகாராஷ்டிரம்

தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டண உச்ச வரம்பை 2,200 ஆக குறைத்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

DIN


தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டண உச்ச வரம்பை 2,200 ஆக குறைத்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ. 4,500ஐ கட்டணமாக நிர்ணயித்தது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்). அதுவே, அரசு ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்காக ரூ. 2,200 உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்ததாவது:

"மருத்துவமனைகளில் மாதிரிகளை சேகரிக்க ரூ. 2,200 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுவே வீடுகளுக்கு வந்து மாதிரிகளை சேகரிக்க ரூ. 2,800 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. முன்னதாக முறையே ரூ. 4,500 மற்றும் ரூ. 5,200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சியர்கள் தனியார் ஆய்வகங்களிடம் பேசி, இந்த கட்டணத்தை மேலும் குறைக்கலாம். தனியார் ஆய்வகங்களில் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகாராஷ்டிரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 91 ஆய்வகங்கள் உள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.