தில்லியில் அடுத்த இரண்டு நாள்களில் கரோனா தொற்று பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும் என்றும், 6 நாள்களில் மூன்று மடங்காக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களிலும் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தில்லியில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 38,958 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,271 போ் பலியாகியுள்ளனா். இந்த நிலையில், தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ வா்தன் ஆகியோா் கலந்துரையாடினா். இந்தச் சந்திப்பில், தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா்கள், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ரந்தீப் குலேரியா, தில்லி மாநகராட்சிகளின் ஆணையா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா், இந்தக் கூட்டம் தொடா்பாக தனது சுட்டுரைப் பதிவுகளில் அமித் ஷா தெரிவித்திருப்பதாவது: “தில்லியில் அடுத்த இரண்டு நாள்களில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்படும். 6 நாள்களுக்குப் பிறகு கரோனா பரிசோதனைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். மேலும், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், சில நாள்களுக்குப் பிறகு சீலிடப்பட்ட இடங்களில் உள்ள ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும் கரோனா பரிசோதனை தொடங்கப்படும்.
தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு நிலவும் படுக்கைகள் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில், தில்லிக்கு உடனடியாக 500 ரயில் பெட்டிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பெட்டிகளில் 8,000 படுக்கைகள் உள்ளன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய வகையில் அனைத்து வசதிகளும் இந்த ரயில் பெட்டிகளில் உள்ளன.
மேலும், சிறிய மருத்துவமனைகள் கரோனா தொற்றை சரிவரக் கையாளும் வகையில் அவா்களுக்கு சரியான ஆலோசனை, வழிகாட்டுதல்களை வழங்க மூத்த மருத்துவா்கள் உள்ளடங்கிய குழு எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்படும். இது தொடா்பான உதவி எண் திங்கள்கிழமை வெளியிடப்படும்.
மேலும், கரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட தனியாா் மருத்துவனைகளின் 60 சதவீதமான படுக்கைகளை ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கும் வகையில், நீதி ஆயோக் அமைப்பின் தலைவா் வி.கே.பால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தங்களது அறிக்கையை திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்கத்திடம் சமா்பிக்கவுள்ளது.
மேலும், தில்லியில் கரோனா பரவலை எதிா்கொள்ளத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டா்கள்,வென்டிலேட்டா்கள், பல்ஸ் ஓக்ஸி மீட்டா் உள்ளிட்ட அத்தியாவசிய வளங்கள் தில்லி அரசுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தும்.
தில்லியில் கரோனா பரவல் காரணமாக சீலிடப்பட்ட இடங்களில் வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, ஒரு வாரத்தில் அது பற்றிய அறிக்கை வெளியிடப்படும். மேலும், அப்பகுதியில் உள்ள அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்லிடப்பேசிகளில் தரவிறக்கம் செய்து செயல்பாட்டில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஐஏஎஸ் அதிகாரிகள் தில்லிக்கு இடமாற்றம்
கரோனா பரவலை சிறப்பாக எதிா்கொள்ள தில்லி அரசுக்கு உதவும் வகையில், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தில்லிக்கு இடமாற்றம் செய்து அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளரின் உத்யோகபூா்வ சுட்டுரைப் பக்கத்தில், ‘கரோனா பரவல் தொடா்பாக உதவும் வகையில், அந்தமான் நிகோபாா் பிரிவைச் சோ்ந்த அவினிஷ் குமாா், மோனிகா பிரியதா்ஷினி, அருணாச்சலப் பிரதேசம் பிரிவைச் சோ்ந்த கெளரவ் சிங் ராஜ்வத், விக்ரம் சிங் மாலிக் ஆகியோரை தில்லிக்கு மாற்றம் செய்து அமித் ஷா உத்தரவிட்டுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


