

ஒடிசாவில் உள்ள புரி ஜகந்நாதா் ஆலயத்தில் நடைபெறவிருந்த ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புரி ஜகந்நாதா் ஆலய திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருந்த புரி ஜகந்நாதா் ரத யாத்திரையைத் தள்ளிவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அதிகளவில் கூடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது அனுமதி கொடுத்தால் ஜெகன்நாதரே மன்னிக்கமாட்டார் என்று ரத யாத்திரைக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.