லடாக்கில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையேயான மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில், சீனா பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மூன்று நாள்களாக இந்திய - சீன ராணுவ அளவில் நடத்தப்பட்ட மிக முக்கிய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரண்டு மேஜர் ஜெனரல்கள் உள்பட 10 இந்திய ராணுவ வீரர்களை வியாழக்கிழமை மாலை சீனா விடுத்திருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்திய மற்றும் சீன ராணுவங்களின் மேஜர் ஜெனரல்கள் மட்டத்தில் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை ஏற்று, எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தும் வகையில் 10 இந்திய ராணுவ வீரர்களை சீனா விடுவித்திருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. ஆணிகளுடன் இரும்புக் கம்பிகள்: இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதா?
இந்திய ராணுவ வீரர்கள் பத்து பேர் விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவப் படைகள் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய வீரா்கள் பலா் காணாமல் போனதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் மோதலின்போது இந்திய வீரா்கள் எவரும் காணாமல் போகவில்லை என இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவும் உறுதிப்படுத்தினாா்.
மேலும், இந்திய ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று இந்திய ராணுவமும் தெரிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினாா் சுவாமி

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!
வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

