இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை
இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. எனினும் நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து 10 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 13,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இமாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 595 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 200 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 376 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...