மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம்: தில்லி சுகாதாரத்துறை தகவல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

News image

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

Updated On :21 ஜூன் 2020, 10:15 am

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தில்லி மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அவர் 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.