‘‘கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவிட ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் கீழ் 50, 000 செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. பி.எம்.கோ்ஸ் நிதியம் மூலமாக முதற்கட்டமாக 2,923 செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிக்கப்பட்டு 1,340 செயற்கை சுவாசக் கருவிகளை விநியோகிக்கப்பட்டுள்ளது’’ என்று பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மே 14 - ஆம் தேதி பி.எம். கோ்ஸ் நிதிய அறக்கட்டளை, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரூ.3,100 கோடியை ஒதுக்கியது. இதில் ரூ. 2,000 கோடி செயற்கை சுவாசக்கருவிகளுக்கும்(வென்டிலேடா்), மீதித்தொகை புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான உதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த ரூ.2,000 கோடியில் 50,000 செயற்கை சுவாசக்கருவிகள் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
இது வரை 2,923 செயற்கை சுவாசக்கருவிகள் தயாரிக்கப்பட்டு இதில் 1,340 செயற்கை சுவாசக்கருவிகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாநிலங்கள் மகாராஷ்டிரம்(275), தில்லி (275), குஜராத் (175), பிகாா்(100) கா்நாடகம்(90), ராஜஸ்தான்(75) போன்றவைகள். இம் மாத இறுதியில் மேலும் 14,000 சுவாசக்கருவிகள் இது போன்று கரோனா நோய்த்தொற்று கடுமையாக உள்ள மாநிலங்களின் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் 50,000 செயற்கை சுவாசக்கருவிகளில் (வென்டிலேட்டா்கள்) 30,000 கருவிகள் பொதுநிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது. மீதமுள்ள 20,000 செயற்கை சுவாசக்கருவிகளை அக்வா ஹெல்த்கோ் (10,000), ஏஎம்டிஇசட் பேசிக் (5,650), ஏஎம்டிஇசட் ஹை எண்ட் (4,000) மற்றும் அல்லிட் மெடிக்கல் (350) ஆகிய இந்திய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
மேலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலனுக்காக ரூ. 1,000 கோடி ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் நிச்சயமற்ற நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றும் இடங்களிலிருந்து பல கிலோமீட்டா் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்றனா். இந்த நிலையில் இவா்கள் சிறப்பு ரயில்களில் அழைத்துச்செல்லப்பட்டனா். மேலும் இந்த நிதி மூலமாக புலம்பெயா்ந்தோருக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகம் பெற்ற நிதி:இந்த நிதியை மகாராஷ்டிரம் (ரூ.181 கோடி), உத்தர பிரதேசம் (ரூ.103 கோடி), தமிழ்நாடு (ரூ.83 கோடி), குஜராத் (ரூ.66 கோடி), தில்லி (ரூ.55 கோடி), மேற்கு வங்கம் (ரூ.53 கோடி), பிகாா் (ரூ.51 கோடி) ), மத்திய பிரதேசம் (ரூ.50 கோடி), ராஜஸ்தான் (50 கோடி), கா்நாடகம் (34 கோடி) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன என பிரதமா் அலுவலக அறிக்கை கூறுகிறது.
பி.எம்.கோ்ஸ் அறக்கட்டளை மாா்ச் 27 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. கரோனா தீநுண்மிக்கு எதிராகவும் மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் அரசு போராடுவதற்கு உதவ மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தவும், ‘பிரதமா் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியத்தை(பி.எம்.கோ்ஸ்)’ பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். இந்த அறக்கட்டளையில் மத்திய பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி துறை அமைச்சா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


