நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேரளத்தில் 152, கர்நாடகத்தில் 397 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 152 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 152 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

Updated On :24 ஜூன் 2020, 2:20 pm

DIN


கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 152 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளம்:

கேரளத்தில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக 152 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 98 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 46 பேர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,603 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,691 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கேரளத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்தார்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,118 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,151 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 3,799 பேர் சிகிச்சையில் உள்ளனர். அங்கு 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.